2026--30 புதிய நல்வாழ்வு காப்பீடு திட்டத்தை(என்.எச்.ஐ.எஸ்.,) புதுப்பிக்கும் முன்பு அரசு ஊழியர்களிடம் விருப்புரிமை கோர வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பாலசுப்பிர மணியன் கூறினார். அவர் கூறியதாவது: என்.எச்.ஐ.எஸ்., எனும் புதிய நல்வாழ்வுக் காப்பீட்டுத் திட்டம் 2025 ஜூன் 30ல் முடிந்தது. ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் 2026-30க்கான திட்டம் விரைவில் புதுப்பிக்கப்பட உள்ளது. 2008ல் இதை அறிமுகப்படுத்திய போது அரசு ஊழியர்களிடம் இத்திட்டம் வேண்டுமா வேண்டாமா எனவிருப்புரிமை கோரப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விருப்ப உரிமை கேட்க வேண்டும். அதன் பின் செய்யவில்லை.
கட்டணமில்லா சிகிச்சைக்கு பதில் பேக்கேஜ் அடிப்படையில் காப்பீட்டு தொகை வழங்குகின்றனர். இதை அரசுக்கு சுட்டிக் காட்டியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களின் மகன், மகள்கள், தங்கள் பெற்றோருக்கு தாங்கள் இணைந்துள்ள தனியார் காப்பீட்டு திட்டங்களில் இணைத்து பாலிசி எடுத்துள்ளனர்.
இதனால் ஒரே நேரத்தில் இரண்டு காப்பீடு திட்டங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே என்.எச்.ஐ.எஸ்., திட்டத்தை புதுப்பிக்கும் முன் அரசு ஊழியர் களிடம் தொடர்வது குறித்த விருப்புரிமை கோர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.அரசு ஊழியர் நலனுக்கு எதிரான என்.எச்.ஐ.எஸ்., திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், என்றார்.
.jpg)
No comments:
Post a Comment