Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, May 28, 2026

மாணவர்கள் பள்ளிக்கு பைக் ஓட்டி வந்தால் பறிமுதல் - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை:

பள்ளி மாணவர்கள் மோட் டார் வாகனங்கள் பயன்படுத் துவது குறித்து தகுந்த நடவ டிக்கை எடுக்குமாறு போக்கு வரத்து மற்றும் சாலைப் பாது காப்பு ஆணையரகம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், பின்வரும் அறிவுரைகளை தலைமை ஆசிரியர்கள், அனைத்து மாண வர்களுக்கும் வழங்க முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும். அதன் படி, சாலை பாதுகாப்பு மன்றம் அனைத்து பள்ளிகளிலும் ஏற் படுத்த வேண்டும். இந்த மன் றத்துக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் தலைவராக இருந்து செயல்பட வேண்டும்.

காலை வழிபாட்டு கூடு கையில், ஒவ்வொரு நாளும் சாலை பாதுகாப்பு குறித்த ஒரு கருத்தை பகிர வேண்டும். என்சிசி, என்எஸ்எஸ், சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு போக்கு வரத்துக் காவல்துறை மூலம், சாலை விதிகள் குறித்த பயிற்சி யும், போக்குவரத்தை சீர் செய் தலில் அவ்வப்போது ஈடுபடுத்தவும் செய்யலாம்.

தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி, பேரணிகள், விழிப்புணர்வு நாடகங்களையும் நடத்த வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு இரு சக்கர வாகனங்களில் வந்தால், வாகனத்தைப் பறிமுதல் செய்து பெற் றோரை அழைத்து தக்க அறி வுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பள்ளிக்கு வெளியில் மாணவர்கள் இரு சக்கர வாக னங்களை ஓட்டி செல்வதை தடுக்க தேவையான அறி வுரைகளை காலை வணக்க கூட்டத்தில் வழங்குதல் வேண்டும்.






No comments:

Post a Comment

LightBlog