தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக (த.வெ.க) அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஆளுநர் மாளிகையால் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் விஜய் வசம் காவல், உள்துறை, பொது நிர்வாகம் உள்ளிட்ட மிக முக்கிய துறைகள் உள்ளன.
த.வெ.க. அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..
==> முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம், சிறப்பு திட்ட செயலாக்கம், மகளிர், குழந்தைகள் நலன், இளைஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை
==> ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை ஆனந்துக்கு ஒதுக்கீடு.
==> பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கீடு.
==> மருத்துவத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை அருண் ராஜுக்கு ஒதுக்கீடு.
==> தமிழக நிதி,ஒய்வூதியம், ஓய்வூதியப் பலன்கள் அமைச்சராகிறார் செங்கோட்டையன்.
==> உணவுத்துறை அமைச்சராகிறார் வெங்கடரமணன்.
==> மின்சாரம், சட்டத்துறை, நீதி, சிறைத்துறை, ஊழல் தடுப்பு நிர்மல்குமாருக்கு ஒதுக்கீடு.
==> பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராகிறார் ராஜ்மோகன்.
==> டி.கே.பிரபுவுக்கு கனிமவளத்துறை மற்றும் சுரங்கத்துறை
ஒதுக்கீடு.



No comments:
Post a Comment