தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சர்களுக்கான இலாக்காக்களை ஒதுக்கி ஆளுநர் மாளிகை சுற்றறிக்கை வெளியீட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் புதிய அரசு ஆட்சி அமைத்திருக்கிறது. விஜய் மாநிலத்தின் 14 வது முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். அவருடைய முதல் அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஒன்பது அமைச்சர்களுக்கு எந்தெந்த துறை ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது அமைச்சர்களின் துறை குறித்த அப்டேட்கள் வந்திருக்கின்றன.
அந்த வகையில் மாநிலத்தின் பொது நிர்வாகம் காவல் வனத்துறை உள்துறை பெண்கள் பாதுகாப்பு இளைஞர் நலன் குழந்தைகள் நலன் உள்ளிட்ட துறைகள் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இயங்கும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான் ஏற்கனவே வெளியான தமிழக வெற்றிக்கழகத்தின் அமைச்சர்கள் உத்தேச பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக ராஜ்மோகனும் கல்வித்துறை அமைச்சராக பி. வெங்கடரமணன் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் பெரும்பாலும் கல்வித்துறை பி. வெங்கடரமணனுக்கு ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கப்பட்டது.
சர்ச்சை பின்னணி
தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான ஜோசப் விஜய் உடன் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் பி. வெங்கடரமணன் இவர் தமிழக வெற்றி கழகத்தின் பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
அவரின் கடந்த கால நேர்காணல் ஒன்றில் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது old fashion - ஆக மாறிவிட்டது என அவர் பேசி இருந்தது சர்ச்சையை கிளப்பியது. மேலும் இவர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சமயத்தில் பெரியாரைக் கொள்கை தலைவராக கொண்ட கட்சியில் பார்ப்பனிய எதிர்ப்பு பழைய சித்தாந்தம் என சொல்லக்கூடிய ஒருவர் எப்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்க முடியும் என பல கேள்விகள் எழுந்தன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் அமைச்சரவையில் மாற்றம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
யாருக்கு என்னென்ன துறைகள்?
- என். ஆனந்த் ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளத்துறை அமைச்சராக (Minister for Rural Development and Water Resources) பதவி வகிக்க உள்ளார். இவருக்கு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டம், ஊரகக் கடன் மற்றும் நீர்ப்பாசனம், சிறு பாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டங்கள் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- ஆதவ் அர்ஜுனா பொதுப்பணி பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் (Minister for Public Works and Sports Development)
- அமைச்சர் அருண்ராஜ் -க்கு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (Minister for Health, Medical Education and Family Welfare) மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன் உள்ளிட்டவை இவரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.
- கே.ஏ. செங்கோட்டையன் நிதித்துறை அமைச்சராக (Minister for Finance) பொறுப்பேற்று உள்ளார். நிதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் படிகள் ஆகியவை இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
- பி. வெங்கடரமணன் உணவு மற்றும் குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சராக உள்ளார்.
- ஆர். நிர்மல்குமார் ஆற்றல் மூலங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம் மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் ஊழல் தடுப்பு, சட்டப்பேரவை, ஆளுநர், தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டு (Passports).
- ராஜ்மோகன் பள்ளி கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ளார்.
- டி.கே. பிரபு இயற்கை வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
- எஸ். கீர்த்தனா தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

No comments:
Post a Comment