அனைவருக்கும் வணக்கம் 🙏
வழக்கமான FAQ
1) 31 May 2026 ஓய்வு பெற உள்ளார்கள்.. 31/5 , 1/6 அன்று கையெழுத்து இட வேண்டுமா?
- தேவையில்லை
- 29/5/26 வெள்ளி அன்று கையெழுத்து போதும்..
- 31/5 ஞாயிறு விடுமுறை கையெழுத்து தேவையில்லை
- 1/6 கையெழுத்து வேண்டாம்
2) ஜூன் 2,3 தேதி பிறந்தவர்கள் , பள்ளி ஜூன் 4 திறந்த பிறகு வரலாமா? மறுநியமனம் உள்ளதா?
- ஜூன் 4 பள்ளி திறப்பு எனவே இந்த சந்தேகம்...
- தவறான புரிதல்...
- ( பிறந்த தேதியின் அன்று பணி ஓய்வு இல்லை.
- அந்த மாதத்தின் இறுதி நாளில் தான் ஓய்வு)
- June 2 முதல் 30 தேதி வரை பிறந்த அனைவருக்கும்
- June 30 இல் தான் பணி ஓய்வு ...
- ( 1/6/1966 பிறந்தநாள் எனில் 31/5/26 இல் ஓய்வு பெற்று விடுவார்கள்)
3) June 4 ( june 4&5) பள்ளி திறக்கும் முதல் நாளில் CL போடலாமா?
- இயலாது கோடை விடுமுறை பணியாளர்கள்/ ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் june 4 CL எடுக்க இயலாது...
- கட்டாயம் விடுமுறை வேண்டும் எனில் EL எடுக்கலாம்..
4) june 4 EL, june 5 CL போடலாமா?
- இல்லை EL+CL இயலாது.
- June 4,5 இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டும் எனில் EL தான் எடுக்க இயலும்
5) 1.6.2026 சிறப்பு நிலை PGTs CEO office, BTs DEO office கருத்துருக்கள் அனுப்ப வேண்டுமா?
- அரசாணை 151 இன் படி தற்போது PGTs & BTs என எல்லோரும் DEO sec office க்கு தான் அனுப்ப வேண்டும்.
- மதிப்பிற்குரிய பள்ளி கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுறுத்தல் படி special camp ஏற்பாடுகள் செய்யப்படும்...
- Format தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள் .
6) HSS HM promotion panel கேட்கப்பட்டது? நேற்றைய தீர்ப்பு? பதவி உயர்வு இருக்குமா...?
- நேற்றைய தீர்ப்பு RTE act வரம்புக்குள் உள்ள பிரிவுகளுக்கு மட்டுமே..
- PGTs RTE வரம்பில் இல்லை...
- எனவே திட்டமிட்ட படி PGTs to HSS HM promotion கட்டாயம் நடைபெறும் எந்த ஒரு சட்ட சிக்கலும் இல்லை.
8) 4/6/26 மருத்துவ விடுப்பு எடுக்கலாமா?
- மருத்துவர் என்று உடல் நலக்குறைவு என சான்று தருகிறாரோ அன்று முதல் மருத்துவ விடுப்பு துவக்கம்...
- 4/6/26 உடல் நலக்குறைவு ஏற்படும் என்று 30/5/26 இல் கணிக்க இயலாது
- ஒருவேளை தற்போது அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருப்பின்... மருத்துவ மனையில் சேர்ந்த நாள் முதல் மருத்துவ விடுப்பு விண்ணப்பிக்கலாம்... விடுப்பை தொடரலாம்
- மருத்துவர் தகுதி சான்று (fitness) வழங்கிய உடன் பணியில் சேர்ந்து கொள்ளலாம்

No comments:
Post a Comment