பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள்! - Asiriyar.Net

Saturday, May 9, 2026

பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள்!




பணியில் இருக்கும் போது மரணம் அடையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள்!






Pdf  Created By
 *க.செல்வக்குமார்* 
தலைமை ஆசிரியர்
மதுரை மாவட்டம்

Below Article is Collected From Various Sources 

1. குடும்ப ஓய்வூதியம் (Family Pension)

பணியில் இருக்கும் அரசு ஊழியர் / ஆசிரியர் மரணம் அடைந்தால், அவரின் துணைவியார் அல்லது தகுதியான குடும்ப உறுப்பினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம்: 
ஊழியர் இறந்த தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு, அவர் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% அல்லது ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பு வரை குடும்ப ஓய்வூதியமாக கிடைக்கும்.

சாதாரண ஓய்வூதியம்: 
10 ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசி ஊதியத்தில் 30% குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதும் அல்லது மறுமணம் செய்யும் வரை கிடைக்கும்.

தகுதி: 
ஒரு வருட தொடர்ச்சியான பணி (one year of continuous service) முடித்திருக்க வேண்டும்.

 முக்கிய அம்சங்கள்:
  • மாதந்தோறும் ஓய்வூதியம்
  • மறுமணம் வரை / விதிகளின்படி
  • குழந்தைகளுக்கும் சில சூழ்நிலைகளில் வழங்கப்படும்
2. இறப்பு நிவாரணத் தொகை (Death Gratuity)

பணிக்கால சேவையை அடிப்படையாகக் கொண்டு ஒருமுறை தொகை வழங்கப்படும். ஊழியர் பணியில் இருந்த காலத்தில் செய்த பணிக்காலத்தின் அடிப்படையில், அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை (Gratuity) வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும்.

இதில்:
  • சேவை ஆண்டுகள் அடிப்படையில் கணக்கீடு
  • ரூ.25 லட்சம் வரை தொகை கிடைக்கும் வாய்ப்பு

3. பொது நலக் காப்பீடு (GIS / Group Insurance Scheme)

அரசு ஊழியர்களுக்கான குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

  • கிடைக்கும் பலன்:
  • சேமிப்பு தொகை
  • காப்பீட்டு தொகை
  • நியமனதாரருக்கு வழங்கப்படும்

4. PF / GPF / CPS / NPS தொகை

ஊழியர் சேமித்து வைத்திருந்த நிதி முழுமையாக வழங்கப்படும்.

GPF: 
பொது வருங்கால வைப்பு நிதியில் (General Provident Fund) அந்த ஊழியர் சேமித்து வைத்திருந்த மொத்த தொகையும் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும்.

CPS: 
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (Contributory Pension Scheme) இருந்தால், அந்தத் தொகையும் வழங்கப்படும்.

5. விடுப்பு பணமாக்கம் (Leave Encashment)

பயன்படுத்தாத Earned Leave / Unearned Leave பணமாக வழங்கப்படும். ஊழியர் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பு (Earned Leave - அதிகபட்சம் 240 நாட்கள்) மற்றும் அரைச் சம்பள விடுப்பு ஆகியவற்றிற்கான ஊதியம், வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும்.

இதில்:
  • EL சரண்டர் தொகை
  • விடுப்பு நாட்களுக்கு சம்பள மதிப்பு

6. சம்பள பாக்கி தொகைகள்

மரணம் வரை கிடைக்க வேண்டிய:

  • சம்பளம்
  • DA
  • Increment
  • Bonus
  • Arrears
போன்ற தொகைகள் வழங்கப்படும்.

7. கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு (Compassionate Appointment)

குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

தகுதி:
  • மனைவி / மகன் / மகள்
  • கல்வித் தகுதி அவசியம்
  • அரசு விதிகளின்படி நியமனம்

8. மருத்துவ உதவிகள்

குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகள் தொடரலாம்.

இதில்:
  • CM Insurance
  • CGHS / ECHS (தகுதியின்படி)
  • மருத்துவ செலவுத்தொகை

9. கல்வி உதவித் தொகைகள்

மரணம் அடைந்த ஊழியரின் குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் கிடைக்கலாம்.

உதாரணம்:
  • Scholarship
  • கல்விக் கட்டண சலுகை
  • அரசு நிதி உதவி

10. சிறப்பு நிவாரண உதவிகள்

சில சமயங்களில் அரசு சிறப்பு நிவாரணத் தொகைகள் அறிவிக்கலாம்.

குறிப்பாக:
  • பணியில் விபத்து மரணம்
  • தேர்தல் / அவசர பணிகள்
  • COVID போன்ற சிறப்பு சூழ்நிலைகள்

11. ஈமச்சடங்கு உதவி

சில துறைகளில் உடனடி இறுதி சடங்கு உதவித்தொகை வழங்கப்படும்.  இறுதிச் சடங்கிற்காக உடனடி உதவியாக ரூ.5,000 வழங்கப்பட்டு, அது மொத்த தொகையில் சரிசெய்யப்படும்.


12. அரசு நல வாரிய உதவிகள்

சங்கங்கள் / நல வாரியங்கள் மூலம் கூடுதல் உதவிகள் கிடைக்கலாம்.

உதாரணம்:
  • ஆசிரியர் சங்க நிதி
  • நல நிதி
  • அவசர உதவி
13. விபத்து மரணம் மற்றும் சிறப்பான பலன்கள்விபத்து காப்பீடு: 

பணியின்போது விபத்தில் இறந்தால், ரூ.1 கோடி வரை காப்பீட்டுத் தொகை (குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு) கிடைக்கும்.

உதவித்தொகை: 
விபத்தில் இறந்த ஊழியர்களின் மகள்களின் திருமணத்திற்காக தலா ரூ.5 லட்சம் (இருவர் வரை) மற்றும் குழந்தைகளின் உயர்கல்விக்காக ரூ.10 லட்சம் வரை சிறப்பான நிதி உதவியும் வழங்கப்படுகிறது.


முக்கிய குறிப்பு:

பலன்கள் ஊழியர் எந்த திட்டத்தில் உள்ளார் (Old Pension Scheme / CPS / NPS), சேவை காலம், துறை விதிமுறைகள் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும்.

தேவையான ஆவணங்கள் மற்றும் வாரிசுதாரர்: நாமினி (Nominee) முறையாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்




No comments:

Post a Comment

Post Top Ad