மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 திட்டத்தின் முதற்கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நேரத்தில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள அனுமதி கோரிக்கை
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் தன்மையை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்தில் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, 01.08.2026 முதல் 30.08.2026 வரை பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு தேவையான அனுமதியை வழங்குமாறு அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.







No comments:
Post a Comment