EMIS இணையதளம் வாயிலாக TC Generation செய்து கொள்ள தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:-
1. TC எடுப்பதற்கு முன்னர் *Annual mark entry, Aadhar number, Account number, school & medium Verification மற்றும் EMIS பிற பணிகள்* முடிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். மேற்கண்ட பணிகளை முடிக்காமல் TC GENERATION செய்ய வேண்டாம்.
2. TC எடுப்பதற்கு முன் student profile ல் உள்ள அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளவும்.
3. *தங்கள் பள்ளியில் மாணவன் படித்த வகுப்புகளுக்குரிய Medium த்தை TC ல் குறிப்பிடும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது* .மற்றப்படி சென்ற வருடம் உள்ள அதே வழிமுறைகளைப் பின்பற்றி TC எடுத்துக் கொள்ளலாம்.
4. 2025-26 ஆம் கல்வி ஆண்டில் தங்கள் பள்ளியில் இறுதி வகுப்பு பள்ளியிலும்
(Primary - வகுப்பு 5
Middle - வகுப்பு 8
High scl -வகுப்பு 10
HR sec - 10 & 12
*முடித்த மாணவர்களுக்கு TC generation செய்து Common pool ற்க்கு அனுப்பும் போது Terminal Class என்பதனை கட்டாயமாக தேர்வு* செய்ய வேண்டும்.
Terminal வகுப்பு தவிர இதர வகுப்புகளில் மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்து இருந்தால் *requested by parents* என்பதினை தேர்வு செய்ய வேண்டும்.
5. அனைத்து மாணவர்களுக்கும் online TC மட்டுமே வழங்க வேண்டும். இறுதி வகுப்பு பயிலும் (Classes - Primary -5, Middle -8 ,High -10, Hr sec -12)மாணவர்களை *எக்காரணம் கொண்டும் மற்ற பள்ளிகள் Raise request மூலம் Admission செய்தல் கூடாது.*
6. ஒரு மாணவருக்கு TC எடுக்கும் பொழுது மூன்று முறை Edit option வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் Edit செய்ய இயலாது எனவே மிகுந்த கவனத்துடன் சரிபார்த்தல் வேண்டும்.
மேற்கண்ட பணியை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment