Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Thursday, May 14, 2026

13.05.2026 TET Promotion Case Review Petition - Update



ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கின் 01-09-2025 நாளிட்ட தீர்ப்பின் மீதான 68 மறு சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையில் இன்று இருபதுக்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்

இதில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி முகுல் ரோத்தகி போன்றோர் வாதிட்டனர்

உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மேகாலயா போன்ற பல்வேறு மாநிலங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்

வழக்கு விசாரணையை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகளும் வழக்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை வழக்கில் மிகவும் கடுமை காட்டினார்கள்

Parliment ன் RTE Act - Second Amendment பற்றி விவாதம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது

மாணவர்களின் கல்வி தரத்தை மையமாகக் கொண்டு கவனமாகக் கொண்டு அதில் அதிக முக்கியத்துவத்தை இரண்டு நீதி அரசர்களும் கொடுத்து விசாரணை மேற்கொண்டார்கள்

தமிழ்நாடு அரசு சார்பில் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் குப்தா இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் கூடுதலாக இரண்டு ஆண்டு காலம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார்

பதவி உயர்வு சார்ந்து எந்த வழக்கறிஞர்களும் எந்தவிதமான வாதத்தையும் முன் வைக்கவில்லை.

அதாவது பதவி உயர்வு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா அல்லது கட்டாயம் இல்லையா என்பது பற்றி எந்த வழக்கறிஞர்களும் வாதிடவே இல்லை.

தேர்ச்சி பெறுவதற்கு கூடுதலாக காலம் வழங்குவது பற்றி பரிசீலிக்கிறோம் என்று 2 நீதி அரசர்கள் கூறியுள்ளார்கள்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற கூடுதல் கால அவகாசத்தை கேட்டு வேறு சில மாநிலங்களும் வாதங்களை முன் வைத்தார்கள்

31-08-2027 க்குள் 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இரண்டு ஆண்டு காலம் கால அவகாசம் நீட்டிப்பு என்பது இரண்டு நீதி அரசார்களாலும் வழங்கப்படலாம் என்று கணிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LightBlog