Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Wednesday, August 5, 2026

தமிழக பட்ஜெட் 2026 - முக்கிய அம்சங்கள் மற்றும் பள்ளி கல்வித்துறை அறிவிப்புகள்

 


தமிழக அரசின் நிதிச்சுமை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது. திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளது என கூறியுள்ளார்

தவெக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தனது முதல் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தது. 

3,734 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ரூ.2,132 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 

5.32 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் வெற்றி மடிக்கணினி திட்டம் என பெயர் மாற்றப்பட்டது. 

கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2,000 கோடி மதிப்பில் வெற்றி மடிக்கணினித் திட்டம் அமல்படுத்தப்படும். 300 மாணவர் சேர்க்கையுடன் மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும். 

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மரியா வில்சன் பட்ஜெட் தாக்கல்

ரூ.277 கோடி மதிப்பீட்டில் 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு ஹெல்மெட் & வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டிகள்

பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்கும் திட்டத்துக்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு புதிய மிதிவண்டி ஹெல்மெட் மற்றும் தண்ணீர் பாட்டில் வைக்கும் வசதியுடன் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்

குழந்தைகளுக்காக புதியதாக 500 அங்கன்வாடி மையங்கள் துவக்கப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு

உயர்கல்வித்துறைக்கு 8393 கோடி. அரசு பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த 2132 கோடி நிதி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்

அரசு நூலகங்களை டிஜிட்டல் மையமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பெண்களுக்கு திருமணத்தின் போது 8 கிராம் தங்கம் பட்டு புடவை மற்றும் அண்ணன் சீர் வழங்க ரூபாய் 812 கோடி ஒதுக்கீடு


மீனவர்களுக்கு பணி இல்லா காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை ரூபாய் 6 ஆயிரத்திலிருந்து 7000 ஆக உயர்வு


தொழில் முதலீட்டு துறைக்கு 4414 கோடி ஐந்தாண்டுகளில் புதிய சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் 


கால்நடை காப்போம் என்ற புதிய காப்பீட்டு திட்டம் கால்நடைகளுக்கு செயல்படுத்தப்படும் 

ஆண்டுதோறும் பத்தாயிரம் பெண்களுக்கு ஆடு, மாடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவசமாக ஆடுகள் மற்றும் மாடுகள் வழங்கப்படும். திட்டத்தின் கீழ் 5  வெள்ளாடுகள் அல்லது ஐந்து செம்மறியாடுகள் இலவசமாக வழங்கப்படும்

கைத்தறி துறைக்கு 1628 கோடி நிதி ஒதுக்கீடு





No comments:

Post a Comment

LightBlog