உயர்நிலைபள்ளிகளில் காலியாக உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் சார்ந்த விவரம் கோருதல் - சாரபு.
பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு/நகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் 01.12.2025 நிலவரப்படி காலியாக உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரங்களை பார்வை 3-ல் காண் இவ்வியக்கக செயல்முறைகளின் மூலம் கோரப்பட்டது.
தற்சமயம், தற்போதுள்ள நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை (31.05.2026-ல் ஓய்வு பெறும் தலைமையாசிரியர்களின் பணியிடத்தினையும் சேர்த்து) இணைப்பில் குறிப்பிட்டுள்ள படிவத்தில் (படிவம்1 மற்றும் 2) பூர்த்தி செய்து SOFT COPY-யினை c1tndse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் கையொப்பமிட்ட பிரதியினை 15/05/2026க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்பிவைத்திட வேண்டும்.
மேலும், ஒவ்வொரு மாதமும் பிரதி 5ஆம் தேதிக்குள் தங்களது மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரத்தினை தவறாமல் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment