பள்ளிக்கல்வித்துறை பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு முன்பாகவே பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மற்றும் தலைமைச் செயலகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
பெரும்பாலான பணியாளர்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், அனைத்து அலுவலக உதவியாளர்கள், பதிவேடு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்கே வர வேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. , அலுவலகத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட இரண்டாம் நிலை அலுவலர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதிகாரிகள், பணியாளர்கள் காலை 10 மணிக்கு முன்பே அலுவலகம் வர வேண்டும்
எந்தவொரு விடுப்பு (CL/ EL) / அனுமதியைப் பெறுவதற்கும், விடுப்புப் பதிவேடுகளை முறையாகப் பராமரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும் அவை சரிவரக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment