ஒவ்வொரு கல்வி ஆண்டின் முடிவிலும் விடுமுறையான மே மாதத்தில் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை அரசு நடத்தி வந்தது. இதனால் ஆசிரியர்கள் அலைச்சல் இன்றி பயன்பெற்றனர். தற்போது இந்த கலந்தாய்வு தள்ளிச்செல்கிறது.
ஜூன் 4ல் மீண்டும் பள்ளிகள் திறக்க அரசு உத்தரவிட்ட நிலையில் புதிய கல்வி ஆண்டு துவங்க இன்னும் 8 நாட்களே உள்ளன. ஆனால் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் தகுதி தேர்வு சார்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 2024, 2025ல் இடம் மாறுதல் மட்டுமே வழங்கப்பட்டது. பதவி உயர்வு வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளன. அதை முறையாக பெற்று மாணவர்களுக்கு வழங்க புதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை பல்வேறு பள்ளிகளில் தொடர்கிறது.
ஒன்றிய, மாவட்ட அளவில் இடமாறுதல் நடந்து வந்த நிலையில் 2 ஆண்டுகளாக அரசாணை 243ன் படி மாநில அளவில் ஒட்டுமொத்தமாக இடமாறுதல் நடத்தப்படுகிறது.
இதை எதிர்த்து ஜாக்டோ ஜியோ, டிட்டோ ஜாக் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள அரசு ஆசிரியர்களின் அதிருப்தியை போக்கி மீண்டும் பழைய முறைப்படி மே மாதத்திலே பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும்.
அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) மற்றும் பதவி உயர்வு தொடர்பான சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், சில குறிப்பிட்ட பிரிவு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் தற்காலிக தடை உள்ளது

No comments:
Post a Comment