Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, May 3, 2026

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றியமைத்தல் - தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பணிமனை - SCERT Proceedings





11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் மாற்றியமைத்தல் தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு சென்னையில் பணிமனை - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!!!


பார்வை 2இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 2026-2027ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 வகுப்புகளுக்கான கலைத்திட்டம். பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இதனடிப்படையில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை (State Board) பல்வேறு நாடுகள். மாநிலங்கள் மற்றும் பிற வாரியங்களின் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்துடன் ஒப்பபீடு செய்யும் பணி இந்நிறுவனத்தில் நடைபெற்றுள்ளது.


இதன்தொடர்ச்சியாக 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மீளாய்வு செய்து இறுதி செய்யும் பணிமனை சென்னை-06. மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 11.05.2026 முதல் 15.05.2026 வரை நடைபெற உள்ளது.


எனவே இப்பணிமனையில் கலந்துகொள்ள எதுவாக இணைப்பிலுள்ள மேல்நிலை வகுப்பு பாடங்களுக்கான பல்கலைக்கழக மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யுமாறு சார்ந்த அலுவலர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்



No comments:

Post a Comment

LightBlog