தமிழ்நாட்டில் +2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் மாணவர்கள் 93.19% பேரும், மாணவிகள் 97% பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் - TOP 5
- ஈரோடு - 98.24%
- சிவகங்கை - 96.97%
- திருச்சி - 96.55%
- தென்காசி - 96.15%
- கன்னியாகுமரி - 96.12%
12ம் வகுப்பு தேர்ச்சி - பின்தங்கிய 5 மாவட்டங்கள்
- கிருஷ்ணகிரி - 91.31
- திருவாரூர் - 91
- வேலூர் - 90.73
- ராணிப்பேட்டை - 88.2
- விழுப்புரம் - 85.92
அரசு & தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் :
- அரசுப் பள்ளிகள் - 92.16%
- அரசு உதவி பெறும் பள்ளிகள் - 96.14%
- தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.72%
- ஆண்கள் பள்ளிகள் - 90.49%
- பெண்கள் பள்ளிகள் - 97.08%
- இருபாலர் பள்ளிகள் - 95.30%
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் :
- 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 2,639
- 95 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 5,170
- 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் 489
- 95 சதவீதம் தேர்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகள் 1,572
+ 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் சிலர் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மே 18 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் தனித்தேர்வில் மீண்டும் எழுதி தேர்ச்சி பெற முடியும்
பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், ஜூலை 8 முதல் 16ம் தேதி வரை நடத்தப்படும் தனித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம்.

No comments:
Post a Comment