தொடக்கக் கல்வி - RIE - 5 Days Training - நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை கோருதல் - சார்பாக - DEE Proceedings - Asiriyar.Net

Friday, November 14, 2025

தொடக்கக் கல்வி - RIE - 5 Days Training - நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை கோருதல் - சார்பாக - DEE Proceedings

 

தொடக்கக் கல்வி - RIE, Mysuru - 5 Days Programme - 17:1.2025 முதல் 21.11.2025 வரை - நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதால் - இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல்-சார்பாக.


பார்வையில் காணும் கடிதத்தின்படி, The Regional Institute of Education, Mysuru மூலமாக நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 17:112025 முதல் 21.11.2025 வரை 5 Days Training on Innovative Pedagogical Practices for the KRP's of Southern Region" உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படவுள்ளது. மேலும், இப்பயிற்சியில் விருப்பமுள்ள ஆசிரியர்களை தெரிவு செய்து பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே, மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளும் பொருட்டு, தங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே இப்பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்களைத் தவிர்த்து பிற நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுள், பிற்காலத்தில் ஆசிரியர் பயிற்சி கருத்தாளராக பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியரை ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் வீதம், தேர்ந்தெடுத்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Excel படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கையொப்பமிட்டு Scan செய்து 13.11.2025-க்குள் deef2sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment

Post Top Ad