டெட் தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகளுக்கான தகுதி குறைந்தபட்ச மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக மாற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிக்க வேண்டி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன. 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 90 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்கள் 82 மதிப்பெண்களும் எடுக்க வேண்டும்.


No comments:
Post a Comment