ஆசிரியர்கள் நலம் காக்கப்படும் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எடுத்து டெட் தேர்வு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சீரய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக நேற்றைய தினம் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் பல்வேறு சங்க பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது
நேற்றைய சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கருத்து கேட்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் மூத்த வழக்கறிஞர் திரு.வில்சன் அவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பித்த நிகழ்வு
TET தேர்வு தொடர்பான விவகாரங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது.
ஆலோசனைக்குப் பின் ஆசிரியர்களின் நலன் காக்க தமிழக முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment