ஓய்வூதியத் திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? ஒரு வாரத்தில் தெரிவிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
*திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு நீதியரசர்கள் அனிதா சுமந்த் , குமரப்பா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
*அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். 01.04.2003 க்கு பின்னர் தமிழ்நாடு அரசில் பணியேற்ற அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் அரசாணை எண்: 259, 06.08.2003 ன்படி நடைமுறைப்படுத்தப்பட்டது.
ஆனால், இதுநாள் வரை இதற்கான விதிமுறைகள் ஏதும் இல்லை. மத்திய அரசு 2013 ஆம் ஆண்டு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது. 12 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு அதனை பின்பற்றவில்லை. ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவைப் பின்பற்றி அரசாணைகளோ, விதிமுறைகளோ இல்லை. இதனால் ஓய்வூதிய பலன்களை பெறமுடியாமல் பலர் உள்ளனர் என்றார்.
*இதனைத் தொடர்ந்து நீதியரசர்கள் கடைசி வாய்ப்பாக தமிழ்நாடு அரசு ஒருவாரத்தில் இது குறித்து தங்களது நிலைப்பாடு என்ன என்பதை மனுதாரரிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 19.11.2025 க்கு ஒத்தி வைத்தனர்.

No comments:
Post a Comment