Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Sunday, November 30, 2025

பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்

 



சென்னையில் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை திருவல்லிக்கேணி, சிவானந்தா சாலையில் நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது.


தமிழகத்தில் 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு பின், பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் மாநில தலைவர் ராமு தலைமை வகித்தார்.


பின், அவர் கூறுகையில், '' முதல்வர் கவனத்தை ஈர்க்க, சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில், மாநிலம் முழுதும், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்,'' என்றார்.



No comments:

Post a Comment

LightBlog