TET தேர்வர்கள் கவனத்திற்கு - Asiriyar.Net

Saturday, November 15, 2025

TET தேர்வர்கள் கவனத்திற்கு

 




TET தேர்வர்கள் கவனத்திற்கு


 ✒️✒️✒️✒️✒️✒️....


🔖 தேர்வுக்கு முன் கவனிக்க வேண்டியவை 


🔹 ஹால் டிக்கெட், ஆதார் கார்டு ,  சாதாரண கருப்பு பேனா-2


ஆகியவற்றை தவறாது எடுத்துச் செல்லவும்...


🔹 குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே இடத்திற்கு செல்லவும் 


🔹 ஒரே பெயரில் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரி இருக்கலாம்.. ஆகையால் ஹால் டிக்கெட்டில் எந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை கவனித்துக் கொண்டு சரியான இடத்திற்கு செல்லவும்..


🔹 காலையில் கட்டாயமாக உணவருந்தி விட்டு செல்லவும்..

🔹 இன்று இரவு நீண்ட நேரம் உறங்காமல் இருக்க வேண்டாம்.. மூளைக்கு சரியான ஓய்வு கொடுத்தால் மட்டுமே தேர்வினில் சிறப்பாக பங்களிக்க முடியும்...


🔖 தேர்வின் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியவை


🔹 வினாத்தாளை நன்கு ஆழ்ந்து வாசிக்கவும்..


🔹OMR சீட்டில் ஒவ்வொரு முறை ஷேட் செய்யும் போதும் வினா எண் மற்றும் விடை எண் சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் கவனித்த பின்னர் ஷேட் செய்யவும்


🔹 எளிமையான வினாக்களுக்கு முதலில் விடை அளிக்கவும்.. 


🔹 ஒவ்வொருமுறை விடையளிக்கும் பொழுதும் ஒரு முறைக்கு இரண்டு முறை பரிசோதித்து கொள்ளவும்..


🔹 எளிமையான வினாக்கள் சில நேரங்களில் சற்று மாற்றிக் கேட்கப்பட்டிருக்கும்.. நன்கு வாசித்து பதில் அளிக்கவும்..


🔹 நேரமில்லை, விடையை மாற்றி அளித்து விட்டேன், கவனிக்காமல் பதிலளித்து விட்டேன் என்ற கூற்றுகளுக்கு இடமளிக்காத வண்ணம் செயல்படவும்...


🔹 அனைத்து வினாக்களுக்கும் விடையளித்து விட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்..


🔹 ஸ்மார்ட் வாட்ச்க்கு அனுமதி இல்லை.. அதேபோல் பேனா மை தெரியும் பேனாவாக இருக்க வேண்டும். (Transparent)


🔹 வினாத்தாள் மிக எளிமையாக தான் இருக்கும்.. 60%-75% வரையில் எளிமையான நேரடி வினாக்கள் கேட்கப்படும்.. அந்த வினாக்களில் ஒரு தவறு கூட விடக்கூடாது.. அதுவே உங்கள் வெற்றியை தீர்மானிக்கக் கூடியது. 


🔹 பதற்றமில்லாமல் நிதானமாக தேர்வினை எழுதி வரவும்..


🔹 நீங்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற வாழ்த்துகள்





No comments:

Post a Comment

Post Top Ad