TNTET தேர்வில் உள்ள முரண்பாடுகள் & பாரபட்சம் - Asiriyar.Net

Thursday, November 20, 2025

TNTET தேர்வில் உள்ள முரண்பாடுகள் & பாரபட்சம்

 



தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக படித்தவர்களுக்கு முதன்மை பாடத்தில் 30 மதிப்பெண்களுக்கு வினாக்கள் 


ஆனால் சமூக அறிவியல் பாடத்தை முதன்மை பாடமாக படித்தவர்களுக்கு மட்டும் முதன்மை பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள்


மற்ற பாடங்களை விட சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு மட்டுமே தேர்ச்சி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது... 


கடந்த ஆண்டுகள் ஆசிரியர் தகுதி தேர்வு _ தேர்ச்சி விகிதங்கள் இதற்கு சான்று.


ஏன் இந்த பாரபட்சம்...


இதே மதிப்பெண் முறையை  ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்விலும் பின்பற்றினால் சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்புகள் அதிகம்..


பாதிக்கப்படுவது தமிழ், ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டுமே...


இந்த முறையை முற்றிலும் உடனடியாக மாற்றப்பட வேண்டும்..


வெற்றி வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்..


அனைவரும் எழுத வேண்டிய பொதுப்பகுதி

1.தமிழ் 30 மதிப்பெண் 

2.ஆங்கிலம் 30 மதிப்பெண் 

3.உளவியல் 30 மதிப்பெண் 


90 மதிப்பெண் வினாக்கள் (பொதுபிரிவு)


*கணிதம் & அறிவியல்  பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்.


1.கணிதம் - 30மதிப்பெண்

2.அறிவியல் 30மதிப்பெண் 


*தமிழ் & ஆங்கிலம் - பாடங்களை முதன்மை பாடமாக எடுத்தவர்கள்


1.சமூக அறிவியல் _ 60 மதிப்பெண்


*சமூக அறிவியல் _ முதன்மை பாடமாக எடுத்தவர்கள்.


1. சமூக அறிவியல் 60மதிப்பெண்...


இந்த முறைமை சரியா?  மதிப்பெண் பெறும் வாய்ப்புகள் அனைத்து பாடப்பிரிவிற்கும் ஏன் சமமாக வழங்கப்படவில்லை...


மாற்றம் தேவை:


1. சமூக அறிவியல் போன்றே அனைத்து முதன்மை பாடத்திற்கு மதிப்பெண் 60


 2. அல்லது சமூக அறிவியல் பாடம் படித்தவர்களுக்கு 30 மதிப்பெண் என அனைத்து பாடம் படித்தவர்களுக்கு உள்ளது போல் மதிப்பெண் குறைப்பது


இந்த மாற்றம் இல்லையேல் கல்வியில் சம உரிமை இல்லை என்று தான் அர்த்தம்..


No comments:

Post a Comment

Post Top Ad