நாளை (21.02.2026) - பள்ளிகள் வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - CEO's Proceedings - Asiriyar.Net

Friday, February 20, 2026

நாளை (21.02.2026) - பள்ளிகள் வேலை நாள் அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - CEO's Proceedings

 

மதுரை மாவட்டத்தில் 24/11/2025 (திங்கள் கிழமை) அன்று மழையின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது . அதனை ஈடுகட்டும் விதமாக நாளை 21/02/2026 (சனிக்கிழமை) மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என இதன் மூலம் ஆணையிடப்படுகிறது.




தென்காசி மாவட்ட ஆட்சியர் அவர்களால் 16.10.2025 அன்று மழையின் காராணமாக உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டதற்காக ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 21.02.2026 சனிக்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.



மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கனமழை காரணமாக 22.10.2025 விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக நாளை 21,02.2026 சனிக்கிழமை அனைத்து தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை அரசு / அரசு உதவிபெறும் / மெட்ரிக் பள்ளிகளுக்கும் வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.







No comments:

Post a Comment

Post Top Ad