TNPSC - துறைத் தேர்வுகள் டிசம்பர் 2025க்கான உத்தேச விடைகள் வெளியீடு! - Asiriyar.Net

Friday, February 13, 2026

TNPSC - துறைத் தேர்வுகள் டிசம்பர் 2025க்கான உத்தேச விடைகள் வெளியீடு!

 



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிக்கை எண் 17/2025, நாள் 22.10.2025.இன் படி அறிவிக்கப்பட்ட துறைத் தேர்வுகள் கடந்த 16.12.2025 முதல் 30:12.2025 வரை (20.12.2025 முதல் 26.12.2025 வரை நீங்கலாக) கொள்குறிவகை, விரிந்துரைக்கும் வகை, கொள்குறிவகை மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வு அமைப்பு முறையில் சென்னை, டெல்லி உட்பட 39 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றன.


இத்தேர்வின் கொள்குறி வகைத் தேர்வுகளின் உத்தேச விடைகள் (Marked as tick) குறிக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வுகளின் வினாத்தாள் ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் 11.02.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளன.


துறைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் எழுதிய கொள்குறி வகை தேர்வின் உத்தேச விடைகளை தேர்வாணைய இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். உத்தேச விடைகள் மீது மறுப்பு ஏதேனும் இருப்பின் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார கால அவகாசத்திற்குள் அதாவது 12022026 முதல் 18.02.2026 அன்று மாலை 5.45 மணி வரை, விண்ணப்பதாரர்கள் அவர்தம் தேர்வு நுழைவு சீட்டு நகல், பதிவு எண், தேர்வின் பெயர், தேர்வு குறியீட்டு எண், வினா எண், அவ்வினாவின் உத்தேச விடை, அவ்வினாவிற்கு விண்ணப்பதாரர் கூறும் விடை (ம) அதற்கான ஆவணங்கள் அடங்கிய தகவல்களை தெளிவாக குறிப்பிட்டு tnpsc.qdd@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக தங்களுடைய மனுக்களை அனுப்பலாம். 


மின்னஞ்சல் முகவரியை தவிர்த்து கடிதம் வாயிலாக விண்ணப்பதாரர்கள் மறுப்பு தகவல்களை தேர்வாணையத்திற்கு தெரிவித்தால் அத்தகவல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது / பரிசீலிக்கப்படமாட்டாது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.




No comments:

Post a Comment

Post Top Ad