பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TNTET 2026 - அறிவிக்கை விளக்கம் - முழு விவரம் - Asiriyar.Net

Friday, February 20, 2026

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TNTET 2026 - அறிவிக்கை விளக்கம் - முழு விவரம்

 



பணியிலுள்ள ஆசிரியர்களுக்கான TNTET 2026 அறிவிக்கை: கேள்விகளும் பதில்களும்


முன்னுரை:

இது 'சிறப்பு TET' அல்ல. தேவையற்ற சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இதனைப் 'பணியிலுள்ளோருக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS)' என்றே குறிப்பிடுகிறது.


1. யார் விண்ணப்பிக்கலாம்? இது யாருக்கான தேர்வு?

  • 01.09.2025ற்கு முன்பே ஆசிரியப் பணியில் சேர்ந்து, இதுவரை TET தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசு / அரசு உதவி பெறும் / அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் காலமுறை ஊதியம் / தொகுப்பூதியம் / பகுதிநேரப் பணியில் இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / அதனையொத்த ஆசிரியராக EMIS IDயுடன் பணிபுரிவோர் இத்தேர்வை எழுதலாம்.


2. யார் எந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும்?

  • இடைநிலை ஆசிரியர் (SGT), தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (Primary HM) (D.T.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன்) TNTET தாள் 1
  • பட்டதாரி ஆசிரியர் (BT), BRTE, சிறப்பு கல்வி ஆசிரியர்கள் (Special Edu. Teachers), நடுநிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் (MHM, HS.HM) (U.G + B.Ed., / அதனையொத்த கல்வித் தகுதியுடன்) TNTET தாள் 2
  • SGT / PHM பதவி உயர்விற்கான U.G + B.Ed., தகுதியுடன் இருப்பின் TNTET தாள் 2 தாள் 2 மட்டும் எழுதலாம்.

  • இரு தாள்களையும் எழுத விரும்புவோர் தாள் 1 மற்றும் தாள் 2 தனித்தனியே உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.


3. எப்போது & எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பிக்கும் காலம்: 2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை.
  • விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


4. விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?

  • விண்ணப்பதாரர் வகை கட்டணம்
  • SC, SCA, ST & மாற்றுத்திறனாளிகள் ரூ.300/-
  • மற்றவர்கள் ரூ.600/-


கட்டணம் செலுத்தும் முறை: Net banking / Credit Card / Debit Card பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.


5. Onlineல் விண்ணப்பிக்கத் தேவைப்படும் ஆவணங்கள் (Scan செய்து பதிவேற்ற):

1 மொபைல் எண் (Mobile No.) -

2 மின்னஞ்சல் முகவரி (E-mail ID) -

3 கடவுச்சீட்டு அளவு வண்ண புகைப்படம் (Passport size colour photograph) Jpg/Jpeg/Png : 40-60 KB

4 கையொப்பம் (Signature) Jpg/Jpeg/Png : 20-40 KB

5 TRB வெளியிட்ட Service Certificate (DEO / CEO எதிரொப்பத்துடன்) Pdf : 250-300 KB

6 சாதிச் சான்றிதழ் (Community Certificate) Pdf : 250-300 KB

7 S.S.L.C., மதிப்பெண் தாள் (Mark sheet) Pdf : 250-300 KB

8 H.Sc., மதிப்பெண் தாள் (Mark sheet) Pdf : 250-300 KB

9 D.T.Ed., டிப்ளமோ சான்றிதழ் (தாள் 1க்கு) Pdf : 250-300 KB


தாள் - 2 எனில்:

9 U.G ஒருங்கிணைந்த / அனைத்து செமஸ்டர் மதிப்பெண் தாள்கள் மற்றும் பட்டம் / தற்காலிக சான்றிதழ் Pdf : 250-300 KB

10 B.Ed., ஒருங்கிணைந்த / அனைத்து செமஸ்டர் மதிப்பெண் தாள்கள் மற்றும் பட்டம் / தற்காலிக சான்றிதழ் Pdf : 250-300 KB


மாற்றுத்திறனாளி எனில்:

* மாற்றுத்திறனாளி சான்றிதழ் (Differently Abled Certificate) Pdf : 250-300 KB

(குறிப்பு: அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdf ஆகப் பதிவேற்ற வேண்டும். Xerox மற்றும் Attested நகல்கள் தேவையில்லை.)


6. விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?

  • 2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.


7. எப்போது - எங்கே - எப்படி தேர்வு எழுத வேண்டும்?

தேர்வு நாள் (உத்தேச): 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. (உறுதியானால் ஹால் டிக்கெட் வெளியாகும்.)

தேர்வு மையம்: TRB முடிவு செய்து Hall Ticketல் குறிப்பிட்டு ஆன்லைனில் வெளியிடும்.


தேர்வு முறை:

  • 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்கள்.
  • OMR தாளில் விடைகளை நிரப்பி அளிக்க வேண்டும்.
  • தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே தேர்வு செய்ய வேண்டும்.


8. TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் (150-க்கு):

  • 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை - 30
  • மொழிப்பாடம் (தமிழ்) - 30
  • ஆங்கிலம் - 30
  • கணக்கு - 30
  • சூழ்நிலையியல் - 30

மொத்தம் - 150

(வினாக்கள் 5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் அமையலாம் என்றாலும், பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு.)


9. TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் (150-க்கு)

  • 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை - 30
  • மொழிப்பாடம் (தமிழ்) - 30
  • ஆங்கிலம் - 30
  • கணக்கு & அறிவியல் (Maths / Science பட்டதாரிகளுக்கு) - 60
  • சமூகவியல் (History பட்டதாரிகளுக்கு) - 60
  • மற்ற பாட பட்டதாரிகள் 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம்.

மொத்தம் - 150

(வினாக்கள் 6 - 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் அமையலாம் என்றாலும், +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு.)


10. தேர்ச்சி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் (150-க்கு)?

வகுப்பு தேர்ச்சி மதிப்பெண் தேர்ச்சி  சதவீதம்

  • SC / SCA / ST  -  60 - 40%
  • BC / BCM / MBC / DNC - 75 - 50%
  • மற்றவர்களுக்கு - 90  - 60%


விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்


 * 01.09.2025 அன்றோ அல்லது அதற்கு முன்போ இடைநிலை ஆசிரியர் (SGT), பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) மற்றும் அதற்கு இணையான பதவிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.


 * அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத் தகுதியானவர்கள்.


 * பணி உயர்வு (Promotion) பெற விரும்பும் தகுதியுள்ள ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.


தேர்வுக் கட்டணம்

 * பொதுப் பிரிவினர்: ரூ. 600/-

 * SC, SCA, ST மற்றும் மாற்றுத்திறனாளிகள்: ரூ. 300/-

 * தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிப்பவர்கள் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.

 * கட்டணத்தை ஆன்லைன் (Net banking / Credit Card / Debit Card) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.








No comments:

Post a Comment

Post Top Ad