IFHRMS : தவறான Income Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்! - Asiriyar.Net

Monday, February 23, 2026

IFHRMS : தவறான Income Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!

 




IFHRMS : தவறான Tax பிடித்தத்தைச் சரி செய்ய Elements அறிமுகம்!


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_


முறைப்படியான Income Tax கணக்கீட்டிற்கும் IFHRMS Tax பிடித்தத்திற்கும் வேறுபாடுகள் இருப்பின் பிப்ரவரி 2026 மாத ஊதியத்தில் சரிசெய்து கொள்ள இரு புதிய Elements IFHRMSல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Income Tax & Cess உள்ளிட்டவற்றில் சரியான கணக்கீட்டிற்கும் IFHRMS கணக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசத்தை,


Different Amount = Actual  - IFHRMS Deduction


என்ற கணக்கீட்டின் வழி வித்தியாசத் தொகையை இந்த Elementsல் அளித்து வருமானவரியைச் சரி செய்து கொள்ளலாம். அதாவது,


= Actual Amount - IFHRMS Deduction

= 10,000 - 10,500

எனில்,

Different Amount = -500


= Actual Amount  - IFHRMS Deduction

= 10,500 - 10,000

எனில்,

Different Amount = 500


Taxல் வேறுபாடு இருப்பின், Add element entryல் Effective Date Februaryயாக வைத்து GTN Income Tax_A என்ற Elementஐ Add செய்து Different Amountஐ உள்ளிடவும்.


இதே போன்று Cess வித்தியாசத் தொகையை GTN Income Tax Cess_A* என்பதில் அதற்கான Different Amountஐ உள்ளிடவும்.


Approval பணிகள் முடிந்த பின்னர், February regular runஐ mark for retry செய்தால் சரியான Result கிடைக்கும்.


*'IFHRMSல பிடிச்சது பிடிச்சதுதானாம்; வரிய திருத்த முடியாது; கூடுதலா பிடிச்சத ITR செய்து வாங்கிக்கச் சொல்லிட்டாங்க' என்போர் மறக்காமல் தங்களது ஊதியம் வழங்கும் அலுவலரை மீண்டும் தொடர்பு கொண்டு சரியான வரிப்பிடித்தத்தை மேற்கொள்ள வலியுறுத்துங்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad