DEO மீது புகார்கள் - நேரடி விசாரணைக்கு இயக்குநர் உத்தரவு - Asiriyar.Net

Tuesday, February 10, 2026

DEO மீது புகார்கள் - நேரடி விசாரணைக்கு இயக்குநர் உத்தரவு

 

அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணி நியமனம் தொடர்பாக எழுந்த புகார் குறித்து இன்று (பிப்.,10ல்) நடக்கும் விசாரணைக்கு டி.இ.ஓ., நாகலட்சுமி ஆஜராக தொடக்கக் கல்வி துணை இயக்குநர் சுப்பாராவ் உத்தரவிட்டுள்ளார்.


அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது: 


தேனி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நாகலட்சுமி மீது பெறப்பட்ட புகார்கள், அவரது நிர்வாக வரம்பில் உள்ள பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட பணி நியமனங்கள் பற்றி நேரடி விசாரணை தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் இன்று (பிப்.,10ல்) நடக்கிறது. 


அதில் நாகலட்சுமி, நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் ஆஜராக வேண்டும். டி.இ.ஓ., பொறுப்பேற்ற 2024 அக்.,10க்கு பின் கையாளப்பட்ட பணிநியமன கோப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது 


கடந்த ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் தொடக்கக் கல்வி துறையில் அரசு உதவி பெறும் பல பள்ளிகளில் கூடுதலாக ஆசிரியர்கள் நியமனம், பள்ளி நிர்வாக பிரச்னையில் அதிகாரிகள் தலையீடு செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் சென்றிருந் தது குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment

Post Top Ad