Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Tuesday, February 10, 2026

ஆசிரியையிடம் ரூ.74 லட்சம் ஊதியம் பிடிக்க கல்வி அலுவலர் உத்தரவு - ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

 




பள்ளி ஆசிரியை ஒருவரிடம் முறையான விசாரணையின்றி ₹74 லட்சம் ஊதியத்தை திரும்பப் பிடிக்க (Recovery) பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 


முறையான விசாரணையின்றி இத்தகைய நடவடிக்கை எடுக்க வட்டார கல்வி அதிகாரிக்கு அதிகாரமில்லை என தெரிவிக்கிறது. 


விசாரணை இன்றி வழங்கப்பட்ட உத்தரவு மற்றும் பள்ளி தாளாளரின் நோட்டீசுக்கு எதிராக ஆசிரியர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இத்தகைய பெரிய தொகையை பிடித்தம் செய்ய எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மேலும், வட்டார கல்வி அதிகாரிக்கு இதற்கு அதிகார வரம்பு இல்லை என்பதால், இந்த நடவடிக்கை செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது




No comments:

Post a Comment

LightBlog