பட்ஜெட் தாக்கல்
பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
முக்கிய அறிவிப்புகள்
நாட்டிற்கே வழிகாட்டும் கடமையினை மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுத்தி வருகிறோம்
பள்ளிக் கல்வித்துறை
- இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
ஓய்வூதியத் திட்டம்
- தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோவுக்கு ரூ. 63,246 கோடி
- மூன்று வழித்தடங்களில் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தொலைவுக்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
- பூந்தமல்லி புறவழிச் சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் வடபழனி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளன
கோயில் திருப்பணிகள்
- 19 முக்கிய கோயில்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள 12,931 திருக்கோயில்களில் ரூ.8,100 திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன
இல்லங்களின் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாடு முழுவதும் போற்றும் திட்டமாக உள்ளது. பிற மாநிலங்களும் பின்பற்றும் திட்டமாக உள்ளது
இந்த திட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரே நாளில் ஏறத்தாழ ரூ.6500 கோடி நிதியை தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் கரங்களில் தவழச் செய்துள்ளோம். அதிகாலையிலேயே வங்கிகளில் மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டதால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர் - தங்கம் தென்னரசு ஸ்டிச்சிங்
- தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு.
- திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
- ரூ.388 கோடியில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது
- போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் விடியல் பயணம் திட்டத்துக்கு ரூ.1722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
- இடைக்கால பட்ஜெட்டில் மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
- மின்சார தேவையைக் கருத்தில் கொண்டு எரிசக்தித் துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
வீட்டு மனை பட்டா
- கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
கலைஞர் கனவு இல்லம்
- 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்ட கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
- மேலும், 29,000 வீடுகள் கட்டுமானப் பணியில் இருக்கின்றன.
- 2001 வரை தமிழக அரசால் கட்டப்பட்ட 1.14 லட்சம் வீடுகள் ரூ. 969 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன.
- புதுமைப் பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளும், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 5.40 லட்சம் மாணவர்களும் என ஒட்டுமொத்தமாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
- இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
- உயர்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு
- ஒன்றிய அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை ஒருபுறம்.. உலகச் சூழலின் ஏற்றத் தாழ்வு நெருக்கடிகள்
- காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, கரையோரம் பூங்காஆகியவை அமைத்து நதிக்கரை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.374 கோடி ஒதுக்கீடு செய்யப்படகிறது.
- விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது - தங்கம் தென்னரசு
- சோழர் அருங்காட்சியம், நவாய் அருங்காட்சியம், நொய்யல் அருங்காட்சியம் என்று மொத்தம் ரூ.285 கோடியில் அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன
மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்....

No comments:
Post a Comment