புதிய முதுகலை ஆசிரியர்கள் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Friday, February 13, 2026

புதிய முதுகலை ஆசிரியர்கள் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க உத்தரவு - Director Proceedings

 

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2023-24, 2024-25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு EMIS இணைய தளம் வாயிலாக பணி நியமன கலந்தாய்வு 7.2.2026 மற்றும் 9.2.2026 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டுள்ளது.


பணி நாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா 13.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதால், அன்று கலந்துகொள்ளும் 20 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் முதன்மைக்கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பபட வேண்டும். 


அதன் பின்னர் தனி நபர் மருத்துவ தகுதிச் சான்று பெற்று அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் 16.02.2026 அன்று திங்கட்கிழமை முற்பகல் முதல் பணி நியமன ஆணை பெற்றுள்ள பள்ளிகளில் பணியேற்க அனுமதிக்கப்பட வேண்டும். இது குறித்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதன்மைக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments:

Post a Comment

Post Top Ad