ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை - Asiriyar.Net

Sunday, February 8, 2026

ஜாக்டோ ஜியோ பாராட்டு விழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உரை

 



சென்னை: "பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி." என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் பேசியுள்ளார்.


திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது என ஜாக்டோ ஜியோ சார்பில் TAPS ஓய்வூதிய முறையை அமல்படுத்திய முதல்வருக்கு சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.


சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜாக்டோ ஜியோ நன்றி அறிவிப்பு மாநாடு இன்று நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி அறிவிப்பு விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சரின் மு க ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


அதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், "அரசு ஊழியர்களுக்காக கலைஞர் செய்த சாதனைகள், சீர்திருத்தங்களை சொல்ல ஒரு மாநாடு போதாது. அரசியல்வாதிகள் கொள்கைப் பிடிப்போடு செய்யும் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்போர் அரசு ஊழியர்கள் தான். ஆசிரியர்களால் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சிறந்து விளங்குகிறது.


22 ஆண்டுகால கோரிக்கைக்கு நிறைவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22 ஆண்டுகளாக முன்வைத்து வந்த உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


ஆசிரியர்களின் பணியால் கல்வியில் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல, தொண்டு. நன்றி சொல்லி நமக்கான உறவை தூரமாக்கி விடாதீர்கள். அரசு ஊழியர்களின் கண்ணீர் துளிகளை துடைக்கவே கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம். நீங்கள் பாடுபட்டு உருவாக்கியவர்கள் தான் தற்போது உலகம் முழுவதும் பணியாற்றி வருகிறார்கள். TAPS திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான சிறப்பு கருணை ஓய்வூதியம், 'உழைப்புக்கான உரிமைத் தொகை' என்ற பெயரில் வழங்கப்படும்" என்று கூறினார்.


மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "திட்டமிட்டு நிதி நெருக்கடியை ம்த்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை கூட முறையாக வழங்குவது இல்லை. நமக்கான வரிப் பகிர்வை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. ,அத்திய அரசு வரிப் பகிர்வை குறைத்தாலும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. திட்டமிட்டு நிதி நெருக்கடியை மத்திய பாஜக அரசு உருவாக்கி வருகிறது" எனத் தெரிவித்தார்.


உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கான மொத்த நிதியையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் நடைபெற்றுவரும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும் 'திமுக அரசை பொறுத்தவரை சொன்னதைத்தான் செய்வோம்; செய்வதைத்தான் சொல்வோம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள்; நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம்' எனவும் அவர் உரையாற்றினார்


"பழைய ஓய்வூதியத் திட்டம் பறிபோக அதிமுக அரசுதான் காரணம். வியர்வைத் துளி சிந்தி உழைத்தவர்களுக்கு ரத்தக் கண்ணீர் வர வைத்ததுதான் அதிமுக ஆட்சி. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எங்களுக்கு பக்கபலமாக இருங்கள், நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறோம். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உங்களது கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேறும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


No comments:

Post a Comment

Post Top Ad