தை அமாவாசை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்! - Asiriyar.Net

Post Top Ad


Friday, January 24, 2020

தை அமாவாசை யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் தரும்!


தை அமாவாசை
24.01.2020 (வெள்ளிக்கிழமை)
நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில்
எமகண்டம் பிற்பகல் 3 மணி முதல் 4.30 வரையில்
மேஷம்
திடீர் அதிர்ஷ்டம் வரவுள்ளதால் விருப்பங்கள் பூர்த்தியாகும். தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அணுகுமுறையில் தாராளமாக இருங்கள். உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்திவிடாமல் இருக்க வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
அதிர்ஷ்ட எண்: 4
ரிஷபம்
இன்று உங்களுக்கு அதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் நன்றாக இருக்கும்.

விரைவாக பணம் சம்பாதிக்கும் ஆசை இருக்கும். உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4
மிதுனம்
திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். உங்களின் உறுதிப்பாடு கவனிக்கப்படும். உங்கள் திறமைகளும் கவனிக்கப்படும். இது வரை எடுத்த முயற்சிகள் யாவும் இன்று உங்களுக்கு பலன் தரும்.
அதிர்ஷ்ட எண்: 2
கடகம்
செலவைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். நாளின் பிற்பகுதியில் பழைய நண்பர் ஒருவர் வருகை தந்து இனிமையை ஏற்படுத்துவார். உங்கள் குடும்பத்தின் உதவியால் தான் வேலையில் உங்களால் சிறப்பாக செயல் பட முடிகிறதென்று நீங்கள் உணர்வீர்கள்.
அதிர்ஷ்ட எண்: 5
சிம்மம்
மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்து விடும். இன்று மாலைக்குள் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டு.
அதிர்ஷ்ட எண்: 3
கன்னி
சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருங்கள். அக்கறையின்றி இருந்தால் நோயில் சிக்குவீர்கள். உங்கள் ஆலோசனையை மற்றவர்கள் எதிர்பார்ப்பார்கள். நீங்கள் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள்.
அதிர்ஷ்ட எண்: 2
துலாம்
புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்றைய அதிர்ஷ்டம் உங்களுக்கு நிச்சயமாக பலன் கொடுக்கும்.
அதிர்ஷ்ட எண்: 4
விருச்சிகம்
இன்று செய்யும் தர்ம ரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். நடப்பவை நல்லதாகவும் இடையூறாகவும் இருந்து உங்களை குழப்பமாக்கி களைப்படையச் செய்யும் நாள். இன்று ஒரு உறவினர் சர்ப்ரைஸ் தரக்கூடும். அதனால் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விஷயம் தடைபடும்.
அதிர்ஷ்ட எண்: 6
தனுசு
மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். குடும்பத்தில் உறவுகளையும் பந்தங்களையும் புதுப்பித்துக் கொள்ளும் நாள். அன்புக்குரியவரின் நடத்தையில் சந்தேகப் படாதீர்கள். ஐ.டி. வேலை பார்ப்பவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பு பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 3
மகரம்
நீங்களாக மருந்து சாப்பிடாதீர்கள், மருந்தை சார்ந்திருக்கும் தன்மை அதிகரித்து டும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது, முன்னேற்றம் நன்றாகத் தெரிகிறது. இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.
அதிர்ஷ்ட எண்: 3
கும்பம்
உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். பாதுகாப்பான முதலீட்டில் முதலீடு செய்தால் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.
அதிர்ஷ்ட எண்: 1

மீனம்
நீண்டகாலம் நிலுவையாக உள்ள பாக்கிகள் வசூலாகும். உங்கள் அழகான இயல்பும், நல்ல பர்சனாலிட்டியும் புதிய நண்பர்களை உருவாக்கவும்,தொடர்புகளை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் கூடுதல் கவனமாக இருங்கள்.
அதிர்ஷ்ட எண்: 7

Recommend For You

Post Top Ad