பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.01.2020
திருக்குறள்
திருக்குறள் : 365
அதிகாரம் : அவாஅறுத்தல்
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
பொருள்
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.
பழமொழி
Sadness and gladness succeed each other.
அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.
இரண்டொழுக்க பண்புகள்
1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.
2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.
பொன்மொழி
இலக்கோடு செல்லும் மக்கள் வெற்றியடைகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எவ்வழியில் செல்கிறோம் என்று தெரியும்.
ஏர்ல் நைட்டிங்கேல்
பொது அறிவு
1. பர்டோலி சத்தியாகிரகத்தை நடத்தியவர் யார்?
சர்தார் வல்லபாய் பட்டேல்.
2. தண்டி உப்பு சத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் நடந்த தூரம் எவ்வளவு ?
24 நாட்களில் 241 மைல் தூரம்.
English words & meanings
Bionomics – study of organisms interacting in their environments. உயிரினங்களின் வாழ்க்கை சூழல் பற்றிய அறிவியல் ஆய்வு.
Bacteriological - Related to the study of bacteria or microbes. நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த
நுண் உயிரிகளின் ஆராய்ச்சியைச் சார்ந்த
ஆரோக்ய வாழ்வு
சிறுதானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இவை அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கு எதிராக ஒரு வல்லமைமிக்க பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது.
Some important abbreviations for students
ITV - Independent Television.
BBC - British Broadcasting Corporation
நீதிக்கதை
தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்
கிளியின் நட்பு
குறள் :
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
விளக்கம் :
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.
கதை :
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.
அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.
அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.
கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.
இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.
நீதி :
இன்றைய செய்திகள்
28.01.20
* கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சீனாவில் மருத்துவ படிப்புக்கு சென்றுள்ள சென்னை மாணவர்கள் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.
* கோயம்பேடு சந்தையில் இரு வகையான (பெல்லாரி மற்றும் சாம்பார்) வெங்காயம் வரத்து அதிகரிப்பு: சாம்பார் வெங்காயம் விலை ரூ.60 ஆக குறைந்தது.
* சீனாவின் வுஹான் நகரம் உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
* ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் விளாசி அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
* உலகப் புகழ் பெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் என்பவர் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியாகி உள்ளது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Today's Headlines
🌸Due to corona virus attack, Chennai students who have gone to medical study in China were unable to return.
🌸Due to the increase in the coming of two types of onion (Bellary and Sambar) in the koyambedu market, the price of sambar onion declined to Rs.60
🌸 Kerala Chief Minister Pinarayee Vijayan has written a letter to Prime Minister Modi demanding that flights should be sent to places including China's Wuhan city to protect the Indians from the corona virus attack.
🌸 Sarbaraz Khan, who plays for Mumbai in Ranji Trophy cricket, has taken an unbeaten double century and lead the team to the front.
🌸Kobe Bryant, the world famous basketball champion, was tragically killed in a helicopter crash yesterday ,that shocked his fans around the world.
Prepared by
Covai women ICT_போதிமரம்