நாம் சாப்பிடக்கூடிய சில உணவு பொருட்களில் பல நச்சு தன்மைகள் இருக்கிறது. இந்த நச்சு தன்மை உடலில் அப்படியே தேங்கி விட்டால் அது நமது கல்லீரலுக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
கல்லீரல் பாதிப்படைந்தால் அது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் பாதிப்படைய செய்யும். எனவே நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுவது அவசியம். மேலும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொண்டால் அது நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும்.
தேவையான பொருட்கள்:
கேரட் -3
மஞ்சள் -2 சிட்டிகை
ஆரஞ்சு -2
இஞ்சி -சிறிய துண்டு
செய்முறை :
இஞ்சியை தோலை நீக்கி சுத்தமாக எடுத்து வைத்து கொள்ளவும்.பின்பு ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். இதனை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.