8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பா.? உண்மை தகவலை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.! - Asiriyar.Net

Wednesday, January 29, 2020

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பா.? உண்மை தகவலை வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்.!





மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்வி கொள்கை திட்டத்தின்படி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாலை வேளையில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி துறை உத்தரவு பிறப்பித்ததாக தகவல் வெளியானது.


30 மதிப்பெண்கள் முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தேர்வு நடத்த வேண்டும்.

திங்கள்-தமிழ், செவ்வாய்-ஆங்கிலம், புதன்-கணிதம், வியாழன்-அறிவியல், வெள்ளி- சமூக அறிவியல் என மாணவர்களுக்கு சிறு தேர்வு நடத்தவேண்டும். பள்ளி நேரங்களில் மூன்றாம் பருவ பாட பகுதிகளிலிருந்து சிறு தேர்வு நடத்த வேண்டும் என கூறப்பட்டது.

இந்தநிலையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதலாக சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்ற தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு செங்கோட்டையன் அளித்த பேட்டியில், பள்ளியின் பாட நேரத்தில் மட்டுமே சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என தெரிவித்தார்.

பருவத்தேர்வு ரத்து குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அடுத்தாண்டு அரசுப் பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்வார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



Post Top Ad