மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கலாச்சார வளம் மற்றும் பயிற்சி மையம் (சென்டர் பாஃர் கல்ச்சுரல் ரிசோர்சஸ் அண்ட் ட்ரெயினிங்-சிசிஆர்டி) சார்பில் நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் கலாசார சங்கம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்படும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் அடிப்படையில் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கரூர் மாவட்டம்வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கடந்த ஆண்டு கலாசார சங்கம் (கல்ச்சுரல் கிளப்) தொடங்கப்பட்டு, பல்வேறு கலாசார விழாக்கள் நடத்தப்பட்டன.
அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில், வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சிசிஆர்டி கல்ச்சுரல் கிளப் (கலாச்சார சங்கம்) விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டது.
இதற்கான பரிசுத்தொகை ரூ.7,500 பள்ளிக்கு அளிக்கப்பட்டது. மத்திய அரசின் கல்ச்சுரல் கிளப் விருதுக்கு தேர்வான வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமைஆசிரியர் நா.தர்மலிங்கம், ஆசிரியர் எஸ்.மனோகர் ஆகியோரை தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் பழனிராசு பாராட்டினார்.