Flash News : 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி மனு! - Asiriyar.Net

Thursday, January 30, 2020

Flash News : 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி மனு!




5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி மனு தாக்கல்.

வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.

5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் , தரமான கல்விமுறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை எனவும் , 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.

மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகள் அச்சப்படும் சூழலும், அதன் காரணமாக அவர்களின் கற்றல் பாதிக்கும் நிலையும் உருவாகும்.

கல்வி என்பது மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. சமூகத்தில் மதிப்பினை பெற்றுத் தருவதோடு தனிமனிதனும் தன்னை மேம்படுத்திக்கொள்ள உதவியாக அமைகிறது. ஆனால் தேர்வு எழுதி தேர்ச்சி அடையவில்லை என குழந்தைகளிடம் கூறும்போது அது அவர்களின் கற்றலை பாதிப்பதாக அமைகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவித்து அதனை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.



Post Top Ad