1வது மாநில அளவிலான குடியரசு தின 14 வயதிற்குட்பட்ட குழு விளையாட்டுப் போட்டிகள் - 2019 - 2020
பொது விதிமுறைகள்
* முதலாவது மாநில அளவிலான குடியரசு தின போட்டிகள் மாணவிகளுக்கு 03 . 02 . 2020 காலையில் 7 . 00 மணியளவில் தொடங்கி 05 . 02 . 2020 முற்பகல் 7 . 00 மணி வரை போட்டிகள் நடைபெறும் . மாணவர்களுக்கு 05 . 02 . 2020 காலையில் தொடங்கி 07 . 02 . 2020 பிற்பகல் வரை நடைபெறும் .
* மாணவ மாணவியர்களுக்கான அனைத்து குழு விளையாட்டு போட்டிகள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் . மாநில அளவிலான குடியரசு தின குழு போட்டிகளில் கலந்துக் கொள்ளும் மாணவ மாணவிகள் தங்கள் அணி மேலாளர்களுடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும் . அணி மேலாளர்கள் இல்லாத அணிகள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கபடமாட்டார்கள் .
* போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுடன் அணி மேலாளராக உக . இ / உ . க . ஆ மட்டுமே மாணவ மாணவிகளுடன் தங்கும் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் . 02 . 02 . 2020 பிற்பகல் 04 . 00 மணி முதல் இரவு 09 . 00 மணிக்குள் வரும் மாணவி அணிகளுக்கு மட்டும் தங்கும் இட வசதி வழங்கப்படும் . அதேபோல் 05 . 02 . 2020 காலை 06 . 00 மணி முதல் அணிகளுக்கு மட்டும் தங்கும் இட வசதி வழங்கப்படும் . இந்நேரத்திற்கு மேல் மாணவ மாணவி அணிகளுக்கு தங்கும் இட வசதி அளிக்கப்படமாட்டாது . 02 . 02 . 2020 பிற்பகல் 12 . 00 மணி முதல் 07 . 02 . 2020 பிற்கல் 06 . 00 மணி வரை மட்டுமே மாணவ மாணவிகளுக்கு இட வசதி வழங்கப்படும் .
* மாணவ மாணவிகள் தங்கும் இடங்களிலேயே வருகை பதிவு செய்ய வேண்டும் . மாணவ மாணவிகளுக்கு குழு விளையாட்டு போட்டி நடைபெறும் மையங்களில் வருகை பதிவு செய்ய வேண்டும் . தங்கும் இடங்களில் ஒரு அணிக்கு ரூ . 1000 / - வீதம் வைப்பு தொகை செலுத்த வேண்டும் . தங்கள் அணிக்கு போட்டிகள் முடிந்தவுடன் அறையை காலி செய்யும்போது வைப்பு தொகை திரும்ப வழங்கப்படும் . 03 . 02 . 2020 முற்பகல் முதல் 07 . 02 . 2020 பிற்பகல் வரை மட்டுமே மாணவ மாணவிகள் , அணிமேலாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு உணவு வசதி செய்யப்பட்டுள்ளது .
* பங்கு பெற்றமைக்கான சான்றிதழ்கள் மற்றும் டி - சர்ட் போட்டி பொருப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் . தங்கும் அறைகள் எவ்வித சேதமும் ஏற்படாமல் அணி மேலாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் . சேதாரமாயிருப்பின் வைப்பு தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது .
* போட்டி நடைபெறும் காலம் குளிர் காலமாக இருப்பதால் போட்டியாளர்கள் தங்குவதற்கு தேவையான கம்பளி , போர்வை , தலையணை , கோப்பை மற்றும் பூட்டு சாவி தங்களுடன் எடுத்து வர வேண்டும் . போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து பள்ளிகளும் பள்ளி நகலான நுழைவு படிவம் , மதிப்பெண் சான்றிதழ் நகல் , ஆதார் அட்டை நகல் , பிறந்த தேதி சான்றிதழ் நகல் , தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன் கொண்டு வருதல் வேண்டும் .
* போட்டிகளில் பங்கு பெறும் வீரர் வீராங்களைகள் போட்டிகள் நடைபெறும் மையத்திற்கு போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக இருத்தல் வேண்டும் . உரிய சீருடைகளுடன் போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் . நடுவரின் தீர்ப்பே இறுதியானது . போட்டிகளில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகள் எக்காரணம் கொண்டும் அன்று இரவு முதல் தங்க அனுமதி இல்லை .
* நடுவர்கள் கூட்டம் 02 . 02 . 2020 மாலை 6 . 00 மணியளவில் அதியமான் பொறியியல் கல்லூரி , ஓசூரில் நடைபெறும் .
* அணிமேலாளர் கூட்டம் இரவு 08 . 00 மணியளவில் தங்கும் இடங்களிலேயே நடைபெறும் . போட்டி நடைபெறும் நாட்களில் வளாகத்தில் எந்த ஒரு இடையூம் ஏற்படுத்தாமல் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
* போட்டிக்கு ஏற்ற விளையாட்டுச் சீருடையில் மட்டும் மாணவ மாணவியர் அனுமதிக்கப்படுவார்கள் .
* மேற்காண் அனைத்து தகவல்களையும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் , விளையாட்டில் பங்கேற்கும் அனைத்து வகை பள்ளிகளில் உள்ள வீரர் வீராங்கனைகளுக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் .
போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு 03 . 02 . 2020 முதல் 05 . 02 . 2020 முற்பகல் வரை உணவுகள் வழங்கப்படும் . மாணவர்களுக்கு 05 . 02 . 2020 காலை முதல் 07 . 02 . 2020 பிற்பகல் வரை உணவுகள் வழங்கப்படும் .