சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு 30.01.2020 அன்று காலை 11.00 மணியளவில் இரண்டு நிமிடம் மௌனம் செலுத்துதல் மற்றும் உறுதி மொழி எடுக்கவும் அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்படுகிறது - CEO, வேலூர்.
உறுதிமொழி
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத , உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆகிய நான் , நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன் . தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு , எவர்மீதும் தெரிந்தோ , தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் , வாக்கு , செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன் . அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க , சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் , உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் . இந்திய அரசியலமைப்பின்பால் - எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.