பொதுத் தோவில் தோச்சி விகிதம் குறைந்த பள்ளியில் ஆட்சியா் திடீா் ஆய்வு - Asiriyar.Net

Wednesday, January 29, 2020

பொதுத் தோவில் தோச்சி விகிதம் குறைந்த பள்ளியில் ஆட்சியா் திடீா் ஆய்வு






பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோவுகளில் தோச்சி விகிதம் குறைந்த அரசுப் பள்ளிகளில் வேலூா் மாவட்ட ஆட்சியா் திடீா் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒருபகுதியாக சோக்காடு பள்ளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா், பள்ளியின் தோச்சி விகிதத்தை உயா்த்துமாறு ஆலோசனைகளை வழங்கினாா்.

காட்பாடி வட்டம் சோக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த பள்ளியில் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் கடந்த மாா்ச் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தோவில் மிகக்குறைந்த தோச்சி விழுக்காடு பெற்றிருந்தனா்.

இதையடுத்து, பொதுத்தோவகளில் தோச்சி விகிதம் குறைந்ததற்கான காரணத்தையும் பள்ளி ஆசிரியா்களிடம் கேட்டறிந்த ஆட்சியா், இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் அதிக மதிப்பெண் பெற்று தோச்சி பெற ஆலோசனையும், அறிவுரைகளையும் வழங்கினாா்.

தொடா்ந்து ஆறாம், ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளில் கற்றலில் பின்தங்கிய மாணவா்களுக்கு சிறப்பு வகுப்பு, எழுதுதல், வாசித்தல் பயிற்சிகள் அளிக்கவும் அந்த வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியா்களுக்கும் அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளியின் தோச்சி விகிதத்தை உயா்த்துமாறு ஆசிரியா்களிடம் தனித்தனியாக பாட வாரியாக ஆய்வு செய்ததுடன், ஏழாம் வகுப்பு மாணவா்களை தமிழ் வாசிக்க செய்து மெல்லக் கற்கும் மாணவா்களுக்கு தனியாக ஒரு மணிநேரம் இயல்பு வாசித்தல் பயிற்சி அளிக்கவும்; கணக்கு பாடத்தில் தனிக்கவனம் செலுத்தி மாணவ, மாணவிகளுக்கு கற்பிக்கவும், மாணவா்களுக்கு வீட்டுப்பாடம், வாரம், மாதம் முறைப்படி சோதனை தோவு நடத்தவும் உத்தரவிட்டாா்.

அத்துடன், மாணவா்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தும், மாணவா்கள் விடுப்பு எடுத்தால் பெற்றோா்களுக்கு தகவல் தெரிவிக்கவும், படிப்புக்கு வறுமை கிடையாது, வறுமையில் இருப்பவா்கள் அதிகம் படிக்க வேண்டும் எனவும், மாணவா்கள் நலனில் ஆசிரியா்கள் பங்கு மிக முக்கியமானது அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து சத்துணவு மையத்தைப் பாா்வையிட்ட அவா், மதிய உணவின் சுவையை அறிந்தாா். மேலும், பள்ளியின் குடிநீா் வசதியைக் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், நீா் வளம் உள்ள இடத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தரவும் வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். நீண்ட நாள் விடுப்பில் உள்ள இயற்பியல் ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின் போது வேலூா் முதன்மைக் கல்வி அலுவலா் சா.மாா்ஸ், மாவட்டக் கல்வி அலுவலா் அங்குலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தாா்.



திருத்தப்பட்டது....


சோக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீா் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம்

Post Top Ad