5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்..!! - Asiriyar.Net

Friday, January 24, 2020

5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து - அமைச்சர் செங்கோட்டையன்..!!





பொதுத்தேர்வு எழுதும் 5, 8-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து எடுத்துக்கூற, பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி சரியாக கோபி பஸ் நிலையத்தில் இருந்து சத்தியமங்கலம் ரோட்டில் முத்து மகால் வரை 2 கி.மீ தூரத்துக்கு நடந்தது. இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஓடினர்.


இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, வருங்காலத்தில் பெண்களுக்கு சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றார். மேலும் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Post Top Ad