7 வது ஊதியக்குழு அரசாணை வெளியீடு:கல்லூரி-பல்கலைகழக போராசிரிகளுக்கு ஊதியம் நிர்ணயம்..! - Asiriyar.Net

Friday, January 24, 2020

7 வது ஊதியக்குழு அரசாணை வெளியீடு:கல்லூரி-பல்கலைகழக போராசிரிகளுக்கு ஊதியம் நிர்ணயம்..!





7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி கல்லூரி , பல்கலை பேராசிரியர்களுக்கு ஊதியம்
தமிழக உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா அரசாணை வெளியீடு
அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி கவுன்சிலின் பரிந்துரைகளை ஏற்று 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி வருகின்ற பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியமானது மாற்றி அமைக்கப்படுக்க படுகிறது.

அதனபடி நேரடி நியமனம் மூலமாக தேர்வு செய்யப்படும் உதவி பேராசிரியர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.57,700 மும், பதவி உயர்வு மூலமாக மூத்த உதவிப் பேராசிரியராக நியமிக்கப்படுபவர்களுக்கு ரூ.68,900மும்,மேலும் பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்படும் செலக்‌ஷன் கிரேடு உதவி பேராசிரியர்களுக்கு ரூ.79,800மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




ஊதியம் நிர்ணயம் :

இதேபோல நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்வாகும் இணை பேராசிரியர்களுக்கு ரூ.1,31,400 மும் மற்றும் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் தேர்வாகம் கூடிய பேராசிரியர்களுக்கு தலா ரூ.1,44,200மும் மேலும் பதவி உயர்வு பெறும் மூத்த பேராசிரியர்களுக்கு ரூ.1,82,200மும், பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் தேர்வாக கூடிய முதல்வர் மற்றும் இயக்குனர்களுக்கு ரூ.1,44,200மும் ஆரம்ப ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பணி நேரம் :

அதன் படி உதவி பேராசிரியர்கள் வாரத்திற்கு 16 மணி நேரமும் மற்றும் இணை பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் வாரத்திற்கு 14 மணி நேரமும் இதே போல் முதல்வர் மற்றும் இயக்குனர்கள் வாரத்திற்கு 6 மணி நேரமும் பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பணிக்காலத்திலேயே பேராசிரியர்கள் ஆராய்ச்சி படிப்பை படித்து முடித்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை ஊதியம் வழங்கப்படும். இதேநேரத்தில் வேறு தொழில்நுட்ப படிப்புகளை பகுதி நேரமாக படித்தால் அதற்கு எந்த ஒரு ஊக்க ஊதியமும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

மேலும் நேரடித் தேர்வு மூலமாகவோ அல்லது பதவி உயர்வு மூலமாகவோ பேராசிரியர்கள் அல்லது பணியாளர்களைத் தேர்வு செய்யும் போது இனி ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் யு.ஜி.சி. விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று எச்சரிக்கையுடன் அதில் தெரிவித்துள்ளது.7 வது ஊதியக்குழு பரிந்துரையை தமிழக உயர்க்கல்வி துறை செயலாளர் மங்கத்ராம் ஷர்மா அரசாணை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post Top Ad