Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Friday, May 30, 2025

ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதி - வதந்திகளை நம்ப வேண்டாம் - தமிழ்நாடு அரசு

 




தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த உண்மையான தகவலை தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் எனத் தகவல் வெளியானது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


ஆனால், தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகாமல், ஜூன் 2ஆம் தேதியே திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


ஆனால் இதையடுத்து, ஜூன் 9 ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கப்படும் எனத் தகவல் பரவியது.


இந்த நிலையில், இந்தத் தகவல் குறித்து தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 9ஆம் தேதி திறப்பதாகப் பரப்பப்படுவது வதந்தி என்று தெரிவித்துள்ளது. இதனால் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பது உறுதியாகியுள்ளது.




No comments:

Post a Comment

LightBlog