'அரசு பள்ளிகளில், ஜூன் 30க்குள் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கை:
கோடை விடுமுறை முடிந்து, இம்மாதம் 30ம் தேதியன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்றைய தினம் அனைத்துபள்ளிகளிலும், தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள், ஆசிரியைகள் விரைவில்பள்ளிக்கு வந்து, மாணவர்களை வரவேற்க வேண்டும்.
சில பள்ளிகளில் சிறார்கள், படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர். இந்த மாணவர்களை அடையாளம் கண்டு, மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர, ஆசிரியர்கள் முயற்சிக்கவேண்டும். இதில் அலட்சியம் கூடாது. ஆசிரியர்கள், கல்வி வல்லுநர்களுடன் நிரந்தர தொடர்பில் இருக்க வேண்டும். ஜூன் 30ம் தேதிக்குள், அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கையை, தலைமை ஆசிரியர்கள் முடிக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் நேரத்தில், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க விரும்பும் தனியார் கல்வி நிறுவனங்கள், இது குறித்து கல்வித் துறை துணை இயக்குநரிடம், முறைப்படி கோரிக்கை அனுப்ப வேண்டும். அவர் ஆய்வு செய்து முடிவு செய்வார்.கிறிஸ்துமஸ் நேரத்தில் அளிக்கப்படும் விடுமுறை நாட்களை, அக்டோபர் மாதம் அளிக்கப்படும் இடைக்கால விடுமுறையில் குறைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment