1 . 24.05.2025 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு மாற்றாக நமது கோரிக்கைகள் தொடர்பாக அரசின் 9 அறிவிப்புகள் குறித்து ஜுன் 2 வது மற்றும் 3 வது வாரத்தில் அரசு ஊழியர் ஆசிரியர் , பணியாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை கொண்டு செல்வது என முடிவாற்றப்பட்டது.
2. PFRDA ரத்து செய்தல் , 8 வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஊழியர் விரோத , மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தேசம் முழுவதும் கருத்தாலும் , கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 2025 , ஜூலை 9 அன்று சுமார் 20 கோடி பேர் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ - ஜியோ பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.
3. ஜூலை மாதம் 3 வது வாரத்தில் மீண்டும் ஜாக்டோ - ஜியோ கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடுவது என முடிவாற்றப்பட்டது .
No comments:
Post a Comment