புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டுவர சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் வாகன பேரணி மேற்கொண்டு நேற்று தலைமைச் செயலாளரை சந்தித்து பேசினர்.
2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் : 309ன் படி, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி கடந்த மே 5ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, கோவை வாலையாறு, ராமநாதபுரம் தனுஷ்கோடி ஆகிய இடங்களில் இருந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சென்னை நோக்கி இருசக்கர வாகன பிரச்சார பேரணியை தொடங்கினர்.
இந்தப் பேரணி சென்னை வந்தடைந்து நேற்று காலை நந்தனத்தில் இருந்து தலைமைச் செயலகம் சென்றது. Old Pension Scheme Issue
அங்கு தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின். ஒருங்கிணைப்பாளர்கள் செல்வகுமார், ஜெயராஜ ராஜேஸ்வரி, பிரெடெரிக் ஏங்கல்ஸ் மற்றும் வெண்மதி, கண்ணன், விஜயகுமார் ஆகியோர் சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். Old Pension Scheme Issue
அதில், “தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவரப்படும் என்ற திமுக வாக்குறுதி கடந்த நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் கடந்த 23 ஆண்டுகளாக புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்தத் திட்டத்தை அமல்படுத்திய ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்துள்ளன.
மேலும் மத்திய அரசு மற்றும் தமிழகத்தை தவிர்த்து இதர மாநிலங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்ப சேமிப்புத் தொகையில் ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
ஆனால் 2002 முதல் தமிழக அரசிடம் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு இவை வழங்கப்படுவதில்லை.
இந்த உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் மே 5 முதல் மே 16 வரை கன்னியாகுமரி, கோவை, ராமேஸ்வரம் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்து மூன்று குழுக்களாக இருசக்கர மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.
எனவே மக்களின் உணர்வையும் அரசு ஊழியர்களின் நலனையும் முக்கியத்துவதையும் கருத்தில் கொண்டு தேர்தல் வாக்குறுதி படி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கவும் உடனடியாக ஆணை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைமைச் செயலாளருடனான இந்த சந்திப்பின்போது சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சுமார் 10 நிமிடங்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
அப்போது புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவது தொடர்பாக கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என்று தலைமைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
அப்போது சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள், என்ன அறிவிப்பு என்று கேட்க பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறி அனுப்பி வைத்துள்ளார் தலைமை செயலாளர்.
No comments:
Post a Comment