ஆன்லைனில் மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டிய அரசுப்பள்ளி - Asiriyar.Net

Wednesday, May 21, 2025

ஆன்லைனில் மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டிய அரசுப்பள்ளி

 



காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், ஆன்லைனில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 


ஆசிரியர்கள் எடுத்திருக்கும் இந்த  முயற்சியால் மாணவர்களின் சேர்க்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பள்ளி டிஜிட்டல் முறையில் இயங்கி வரும் நிலையில் , தற்போது ஆசிரியர்களின் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது சமூக வலைதள பதிவில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து பாராட்டியுள்ளார்.


இப்பள்ளி, இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்காக வழக்கமான விளம்பரங்களையோ, படிவங்களையோ இல்லாமல், QR கோட் என்ற முறையை அறிமுகம் செய்து, மீண்டும் மீண்டும் புதுமையான அணுகுமுறைகளை கையாண்டு, மாணவர்களை வளர்ச்சி பாதைக்கு அறிவியல் பார்வையில் அழைத்து செல்லும் இந்த முயற்சிக்கு, நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் Anbil Mahesh Poyyamozhi அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


பாராட்டி ஊக்கமளித்த மாண்புமிகு அமைச்சருக்கு நன்றியும், புதுமைகளை நிகழ்த்தி வருகிற திருப்புட்குழி தொடக்கப்பள்ளியின் வளர்ச்சிக்கான பணியில் முக்கிய பங்காற்றும், ஒரு நல்ல ஆசிரியருக்கான விருதும் அதற்கான பரிசுத்தொகையும் தமிழ்நாடு அரசு வழங்கியதிலும், அதை “என் பள்ளியின் வளர்ச்சிக்காகவே செலவழிப்பேன்” என்று மனமுவந்த முன்முயற்சியுடன் செயல்படும் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் அனைத்து ஆசிரியர் பெருமக்கள், துணை நிற்கும் பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும், இதயம் நிறைந்த பாராட்டுகளும்!


"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; அது பெருமையின் அடையாளம்!"




No comments:

Post a Comment

Post Top Ad