மிகவும் குறைந்த கட்டணத்தில் அரசு மத்தியப் பல்கலைக் கழகங்களில் இளங்கலை, முதுகலை, பி.எச்டி. படிப்புகளைப் படிக்க முடியும்.
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் நாடு முழுவதும் 13 மத்தியப் பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. இது தவிர 5 பல்கலைக் கழகங்களும் இயங்கி வருகின்றன. இவை அனைத்துமே மிகவும் குறைவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்குகின்றன.
மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியான ஹாஸ்டல் வசதியும் இங்குண்டு. மத்தியப் பல்கலைக் கழங்களுக்கு என நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அரசின் ஏதாவது ஒரு மத்தியப் பல்கலைக் கழகத்தில் (ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, குஜராத், ஹரியாணா, ஜம்மு, ஜார்க்கண்ட், காஷ்மீர், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெற்கு பிஹார், பெர்ஹாம்பூர்) சேர்ந்து படிக்கலாம்.
தமிழகத்தில், திருவாரூர் மாவட்டத்தில் மத்தியப் பல்கலைக் கழகம் இயங்கி வருகிறது. இங்கு படிக்க 60 சதவீத மதிப்பெண்களோடு பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் 55 சதவீதமும் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப் பெண்களும் பெற்றிருந்தால் போதுமானது.
ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் அறிவியல்), ஒருங்கிணைந்த எம்.ஏ., மற்றும் எம்பிஏ உள்ளிட்ட முதுகலைப் படிப்புகள் இங்கே கற்பிக்கப்படுகின்றன., எம்.பில்., பிஎச்டி ஆகிய படிப்புகளும் இங்கே உண்டு.
இளங்கலை ஆசிரியர் பயிற்சி, இளங்கலை சட்டப் படிப்பு, மக்கள் தொடர்பியல், ஒருங்கிணைந்த சமூக அறிவியல் ஆகியவையும் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அனைத்துப் படிப்புகளுக்குமான பருவத் தேர்வு கட்டணம் சொற்பத் தொகையே பெறப்படுவதும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment