தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- Il ஐ சார்ந்த இணை இயக்குநர் பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.
பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைகளில் பணியாற்றும் 6 இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வி செயலாளர் சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அரசாணை:
பள்ளிக்கல்விப் பணியில் பணியாற்றும் 6 இணை இயக்குநர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. இதன்படி, சென்னை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநர் (நிர்வாகம்) சுகன்யா- தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநராகவும், பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநர் (மேனிலைக் கல்வி) ஞானகவுரி- பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநராக (இடைநிலை)வும்,
இணை இயக்குநர் (இடைநிலை) பூபதி- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணை இயக்குநராக (சிறப்புத் திட்டங்கள்)வும், தொடக்கக் கல்வி இயக்கக இணை இயக்குநர் (நிர்வாகம்) கோபிதாஸ்- பள்ளிக் கல்வி இயக்கக இணை இயக்குநராகவும் (மேனிலைக் கல்வி), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (சிறப்புத் திட்டங்கள்) சுவாமிநாதன்- தொடக்க கல்வி இயக்கக இணை இயக்குநராகவும் (நிர்வாகம்), தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர் ராமகிருஷ்ணன்- மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநராகவும் (நிர்வாகம்), பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.
Click Here to Download - G.O 107 - JD Transfer Order - Pdf
No comments:
Post a Comment