தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு தர ஊதியம் முறையே ரூ.5400 / ரூ.5700 நிர்ணயம் செய்தல் - நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் பொழுது ஊதிய நிர்ணயம் செய்தல் - பள்ளிக்கல்வித்துறை அரசு துணைச் செயலாளரின் கடிதம் எண்: 11100/ தொ.க.1(1)/ 2023-1, நாள்: 15-12-2023
தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் தேர்வு நிலைக்கு ரூபாய் 5400 தர ஊதியம் பெறும் நிலையில் அவரே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறும் நேர்வில் ஊதிய நிர்ணயம் குறித்து அரசு விளக்கக் கடிதம்.
இக்கடிதத்தின் அடிப்படையில் துவக்கப்பள்ளித் தலைமையாசிரியர் பணியில் 31.05.2006 க்கு முன்னர் தேர்வு நிலை ஊதியம் ₹5400 வழங்கியது சரியானது என்றும், அவரே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறும் போது தர ஊதியம் ₹ 4700 நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது
அரசாணை (நிலை) எண்.23, நிதி (ஊ.பி.)த் துறை, நாள் 12.01.201-இல் பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தலைமையாசிரியர் பணியிடங்களின் மற்றும் நடுநிலைப்பள்ளி சாதாரண நிலை ஊதியமானது முறையே ரூ.9300-34800.ஊ 4600, ரூ.9300-34800 த.ஊ 4500 மற்றும் ரூ.9300-34800.4700 மற்றும் என 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.01.2011 முதல் பணப்பயன் பெறும் வகையில் திருத்தியமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அரசு கடித + எண்:14483/CMPC/2011-1, நிதித்துறை, நாள் 05.01.2012-இல் 01.01.2006-க்கு முன்னர் மற்றும் 0101.2006 முதல் 31.05.2009 முடிய உள்ள காலத்தில். தேர்வு நிலை / சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட வேண்டிய தேர்வு நிலை / சிறப்பு நிலையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய ஊதிய விகிதம் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டதில் ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு பணியிடங்கள் இருப்பின் அக.எண்.83305/ ஊ.பி/20101, நிதித் துறை, நாள் 08.11.2010.இன் பத்தி 4 (1).இன்படி தேர்வு நிலை / சிறப்பு நிலையில் முறையே அப்பணியிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பதவி உயர்வு பணியிடங்களின் சாதாரண நிலை ஊதிய விகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்து ஆணையிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 01012006-க்கு முன்னர் மற்றும் 01012006 முதல் 3105.2009 முடிய உள்ள காலத்தில், தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்ற தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பின்வருமாறு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 2 மேற்காண் ஆணைகளின்படி தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பணிமூப்புத் தன்மையால் பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற இயலாதவர்களுக்கு தேர்வுநிலை சிறப்புநிலையில் தர ஊதியம் முறையே ரூ.15600-39100 த.ஊன 5400 மற்றும் ரூ.15600-39100.த.ஊ 5700 என ஊதியம்
பின்னர் நிர்ணயம் செய்யப்பட்டு பிஏ/பி.எஸ்சி./பிலிட், இளங்கலை பட்டத்துடன் பி.எட். பட்டய கல்வித் தகுதியும் பெற்று பட்டதாரி / நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதால், அட்டவணையில் தெரிவித்தவாறு அக.எண்.63305/ஊ.பி/2010:1, நிதித் துறை, நாள் 08112010-இன் பத்தி 4(i)-இன்படி தேர்வுநிலை / சிறப்புநிலையில் முறையே அப்பணியிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் நிலை பதவி உயர்வு பணியிடங்களின் சாதாரண நிலை ஊதிய விகிதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என தங்களுக்கு தெரிவித்துக் கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்.
No comments:
Post a Comment